Latestமலேசியா

இன்று நவம்பர் 14 அன்று, மேயர் பதவியை விட்டு விலகுகிறார் மைமூனா

கோலாலம்பூர், நவம்பர் 14 – முக்கிய அரசு நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளதால் டாக்டர் டத்தோ ஸ்ரீ மைமூனா முகமட் ஷாரிப், திட்டமிடப்பட்ட காலத்தை விட முன்கூட்டியே மேயர் பதவியை விட்டு விலகுகிறார்.

அவரின் பதவிக்காலம் இன்று நவம்பர் 14-ஆம் தேதியன்று முடிவடையள்ளது.

மைமூனாவின் தலைமையில் DBKL பல முன்னேற்றங்களைப் பெற்றுள்ளது. 2024-ல் ஊராட்சி மன்றம் 27.6 மில்லியன் ரிங்கிட்டை வருமான மீதியாக பதிவுசெய்த நிலையில் இது 2023 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 137 விழுக்காடு முன்னேற்றத்தைக் குறிக்கின்றது.

அவர் உலகளாவிய கூட்டமைப்புகளில் நகரத்தின் நிலைப்பாட்டை உயர்த்தியுள்ளார். மேலும் Zero Waste Initiative, Green Loop, Urban Climate Resilience Programme போன்ற பல பசுமை மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களை மேற்கொண்டுள்ளார்.

அவர் பல உள்ளூர் மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார். அரசு, அவரது புதிய பொறுப்பில் கோலாலம்பூர் Landmark திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!