
லக்னோவ், டிசம்பர்21- இந்தியா உத்தரபிரதேத்தில் ஒரு பெண் போலீஸ் கான்ஸ்டபிளுடன் ஏற்பட்ட தனிப்பட்ட உறவுகள் காரணமாக, ஒரு போலீஸ் நிலையத்தில் அதிகாரிகளுக்குள் மோதல் ஏற்பட்டு அது வன்முறையில் முடிந்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
சம்பந்தப்பட்ட அப்பெண், அந்த போலீஸ் நிலையத்தில் இருக்கும் அனைத்து அதிகாரிகளுடனும் கள்ள உறவு வைத்திருந்தாராம்.
இது வெளிச்சத்துக்கு வரவே, அவர்களுக்குள் சண்டை மூண்டு துப்பாக்கிச் சூடு வரை போயிருக்கிறது.
அதில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்ததாகவும் சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது உண்மைதானா என்பதை கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
விசாரணை இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே இருப்பதால், இப்போதைக்கு எந்த முடிவுக்கும் வர இயலாது.
எனவே, சரிபார்க்கப்படாத தகவல்களை நம்புவதோ அல்லது பரப்புவதோ கூடாது என்று பொது மக்களை போலீஸார் எச்சரித்துள்ளனர்.



