
பினாங்கு, செப்டம்பர் 11 – பினாங்கில், இளம் பெண்ணொருவர் தனது காதலனின் மைவி காரை ரகசியமாக விற்று, தனக்கு மிக விருப்பமான ‘chanel’ பிராண்டட் கைப்பையை வாங்கிய சம்பவம் வலைதளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அப்பெண்ணின் காதலன் தொழில் பயணமொன்றை முடித்து விட்டு வீடு திரும்பியபோது, தனது மறைந்த உறவினரின் நினைவாக வைத்திருந்த கார் வீட்டின் முன் இல்லாமல் இருந்தைக் கண்டு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அவர் காதலியிடம் விளக்கம் கேட்டபோது, அவள் மிக சாதாரணமாக
அந்தக் காரை விற்றுவிட்டேன் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் ‘sambung bayar’ முறையில்தான் விற்றேன் என்று கூறிவிட்டு சென்றதாக அவர் கூறினார்.
இறுதியில், அவள் வாங்கிய அந்தப் புதிய கைப்பை புகைப்படத்தை “Work hard, be your own queen” என்ற வாசகத்துடன் பெருமையாகப் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த இளைஞர் மிகுந்த மனவேதனையுடன், தன் காரையே ஒரு கைபைக்காக விற்றிருக்கின்றாள் என்றால் அடுத்தது அவன் என்ன செய்வாளோ என தன பதிவை முடித்துள்ளார்.
இப்பதிவிற்கு சமூக ஊடகத்தில் அந்த இளைஞனுக்கு ஆதரவாக நெட்டிசன்கள் கருத்துரைத்து வருகின்றனர்.