கம்போங் பாரு குண்டாங்கில் துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளிகள்; திருப்பிச் சுட்ட போலீஸால் ஒருவர் பலி, மற்றவர்கள் கைது
கோலாலம்பூர், செப்டம்பர் 25 – இன்று அதிகாலை ரவாங்கின் கம்போங் பாரு குண்டாங்கில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், குற்றவாளி ஒருவன் கொல்லப்பட்டான்.
முன்னதாக, குற்றவாளிகள் ஒரு குழுவாக இருந்த Nissan Grand Livina பல்நோக்கு MPV ராக வாகனத்தை, போலீஸ் மடக்கியுள்ளனர்.
அப்போது, தேடப்பட்டு வரும் குற்றவாளிகளான இவர்கள், வாகனத்தை நிறுத்த மறுத்து துப்பாக்கி வேட்டுகளைக் கிளப்பியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, அதிகாலை 2 மணியளவில், குற்றப் புலனாய்வுத் துறையின் போலிஸ் குழு திருப்பிச் சுடத் தொடங்கியதில், ஒருவர் பலியான நிலையில், மற்றவர்கள் வெற்றிகரமாகக் கைது செய்யப்பட்டனர்.
இதனை சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹூசைன் ஒமர் கான் (Datuk Hussein Omar Khan) உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் செய்தியாளர் சந்திப்பில் அல்லது ஊடக அறிக்கை வாயிலாக அறிவிக்கப்படும் என்றார், அவர்.