Latestமலேசியா

காரோடு கார் உரசல்; கோபத்தில் காரின் விளக்கை எட்டி உதைத்த ஆடவர் கைது

ஜோகூர் பாரு, ஜூலை-3 – ஜோகூர் பாருவில் காரோடு கார் உரசியதால் கோபமடைந்து ஒரு காரின் விளக்கை எட்டி உதைத்து உடைத்த ஆடவர் கைதாகியுள்ளார்.

ஜூன் 27-ஆம் தேதி இரவு உணவங்காடி நிலையைமொன்றில் நிகழ்ந்த அச்சம்பவத்தின் வீடியோ வைரலானதை அடுத்து, அவர் கைதானார்.

அங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில் அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கைதானவர் 40 வயது ஆள்ளூர் ஆடவர் ஆவார்.

அவருக்கு ஏற்கனவே 4 குற்றப்பதிவுகள் இருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டதாக, ஸ்ரீ ஆலாம் போலீஸ் கூறியது.

அந்நபரை தடுத்து வைத்து விசாரிக்க ஏதுவாக இன்று நீதிமன்ற ஆணைப் பெறப்படவுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!