
குண்டாசாங், ஜனவரி-17,சபா, குண்டாசாங்கில் நேற்று காலையிலிருந்து பெய்த அடைமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் homestay வீடொன்று பாதிக்கப்பட்டது.
எனினும் மாலை 5 மணிக்கு ஏற்பட்ட அச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.
சம்பவத்தின் போது அவ்வீட்டிலும் யாரும் தங்கியிருக்கவில்லை.
சம்பவ இடத்தில் கண்காணிப்பை மேற்கொண்ட தீயணைப்பு – மீட்புத்துறை அதன் சுற்று வட்டார மக்களை வேறிடங்களுக்கு மாறிச் செல்ல அறிவுறுத்தியது.
சற்று மேடான இடத்தில் அமைந்துள்ள அவ்விடத்தின் மாலை 6 மணி வாக்கில் தீயணைப்புத் துறையின் நடவடிக்கை முடிவுக்கு வந்தது.