
ஜோகூர் பாரு, டிசம்பர்-31,
ஜோகூர் பாரு, தாமான் செலேசா ஜெயா தொழில் பூங்காவில் உள்ள உணவுகளைப் பதப்படுத்தும் தொழிற்சாலையின் செயல்பாடுகளை நிறுத்த, சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது.
அருகிலுள்ள கிளையாற்றில் தூய்மைக் கேடு ஏற்படுவதற்குக் காரணம் என கண்டறியப்பட்டதால், அவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழல் துறைகளுக்கான ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினர் Ling Tian Soon அதனை உறுதிபடுத்தினார்.
தற்போதைக்கு மாசுபாட்டை வெளியேற்றும் கருவிகளின் செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் வழி, ஆற்று நீர் மேலும் மாசடைவதிலிருந்து தடுக்க முடியும்.
பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகே, அந்த மாசுபாட்டுக்கு அத்தொழிற்சாலைக் காரணமென்பது உறுதியானதாக அவர் சொன்னார்.
விசாரணைகள் முழுமைப் பெற்றதும் அத்தொழிற்சாலை மீதான அடுத்தக் கட்ட நடவடிக்கை முடிவாகுமென்றார் அவர்.