
பகோட்டா, டிச 15 – கொலம்பியாவின் வட பகுதியிலுள்ள வட்டாரத்தில் பள்ளிப் பிள்ளைகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று மலைப் பகுதி சாலையிலிருந்து விலகி விழுந்ததில் 17 மாணவர்கள் உயிர் இழந்ததோடு 20 பேர் காயம் அடைந்தனர்.
பள்ளிப் பயணத்திற்குப் பிறகு கரீபியன் நகரமான Tolu நகரிலிருந்து , an-tee-oh-keeonyo உயர்நிலைப் பள்ளி மாணவர்களை அந்த பஸ் ஏற்றிச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக an-tee-oh-keeya ஆளுநர் Andres Julian x தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன் ஞாயிற்றுக்கிழமை இரவு கடற்கரையில் அந்த மாணவர்கள் தங்கள் பட்டமளிப்பு விழாவைக் கொண்டாடினர்.
டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்த இந்த துயரமான செய்தி ஒட்டு மொத்த மக்களுக்கும் துயரத்தை ஏற்படுத்தியிருப்பதாக Andres Julian தெரிவித்தார்.



