
கோத்தா பாரு, ஜனவரி-26-கிளந்தான், கோத்தா பாருவில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில், 89 வயது மூதாட்டி உயிரிழந்தார்.
அவருடன் வீட்டில் பராமரிக்கப்பட்டு வந்த 70 பூனைகள் 5 நாய்களும் தீயில் உடல் கருகி மாண்டன.
தீ பரவிய நேரத்தில், மூதாட்டியின் வளர்ப்பு மகள் வேலைக்காக வெளியே சென்றிருந்தார்.
அண்டை வீட்டார், மூதாட்டி உதவி கேட்டு கையசைத்ததாகவும் ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் உதவ முடியாமல் போனதாகவும் கூறினர்.
தீயில் 98 விழுக்காடு வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.



