
சிரம்பான், பிப்ரவரி-21 – நெகிரி செம்பிலான் கோலா பிலாவில் தொழுநோய் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.
ஆக்கப்பூர்வப் பலனைத் தரும் சிகிச்சை கிடைப்பதால், நோயாளிகளைத் தற்போது தனிமைப்படுத்த வேண்டியதில்லை என சுகாதார அமைச்சு தெரிவிதத்து.
என்றாலும், தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன், தொற்று மற்றும் தொடர்பு கண்டறிதல் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தொழுநோய்க்கான அறிகுறிகள் காணப்பட்டால், அருகிலுள்ள சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறவும் பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
நேற்று முன்தினம் வரைக்குமான நிலவரப்படி, தொழுநோய் நோயாளிகளைக் கண்டறிவதற்கான தீவிர முயற்சிகளின் ஒரு பகுதியாக, கோலா பிலாவின் கம்போங் ச்செர்குன் மற்றும் கம்போங் குந்தூரில் உள்ள 460 குடியிருப்பாளர்களில் 368 பேரை, நெகிரி செம்பிலான் சுகாதாரத் துறை பரிசோதனைக்கு உட்படுத்தியது.
இன்றுவரை, 9 தொழுநோய் நோயாளிகள் உறுதி செய்யப்பட்ட வேளை, அவர்களில் கம்போங் ச்செர்குனைச் சேர்ந்த 18 வயது பெண் பிப்ரவரி 17-ஆம் தேதி உயிரிழந்தார்.
மற்ற நோயாளிகள் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி சிகிச்சை பெற்று வருகின்றனர்.