
கோலாலம்பூர், டிச 16 – கோலா லங்காட், ஜாலான் சுங்கை ரம்பாயில், ஒரு போர்ஷே பனமேரா ( Porsche Panamera ) கார் ஓட்டுநர் தனது கைதொலைபேசியை எடுத்தபோது, அது இருக்கைக்கு அடியில் விழுந்ததால் அதனை எடுக்க முயன்றபோது அக்கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து பின்னர் கால்வாய் ஓரத்தில் நின்றது. பிற்பகல் மணி 3.20 அளவில் 40 வயதுடைய உள்நாட்டு ஆடவர் ஷா ஆலமில் இருந்து ஜென்ஜாரோம் நோக்கி தனது போர்ஷே பனமேரா காரை ஓட்டிச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கோலா லங்காட் போலீஸ் தலைவர் முகமட் அக்மல்ரிசல் ரட்ஸி ( Mohd Akamalrizal Radzi ) தெரிவித்தார்.
( Google Maps ) செயலியைத் திறக்க அந்த நபர் பயன்படுத்திய கைதொலைபேசி இருக்கைக்கு அடியில் விழுந்ததால் அதனை அவர் எடுக்க முயன்றபோது இச்சம்பவம் நிகழ்ந்தது. ஓட்டுநருக்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இருந்தபோதிலும் அவர் எவ்வித காயத்திற்கும் உள்ளாகவில்லை எனினும் இந்த விவகாரம் 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 43(1) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக (Akmalrizal )தெரிவித்தார்.



