
கோஸ்டா ரிக்காவின் டார்டூகுவேரோ தேசிய பூங்கா அருகே மீன்பிடிப் பயணத்தின் போது பிரகாசமான ஆரஞ்சு நிறச் சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில் இதுவரை கண்டறியப்பட்ட ஒரே சுறா இதுவாகும்.
இந்த வினோத நிறம் xanthism எனப்படும் அரிதான நிலைமையால் ஏற்படுகிறது. சுறா போன்ற மீன்களில் இது மிகவும் அரிதாகவே ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலைமையில் தோலில் உள்ள கருநிறப் பிக்மென்ட் குறைவதால் தோல் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்திற்கு மாறுகிறதாம்.