
ஈப்போ, செப்டம்பர்-12 – ஜாலான் சிம்பாங் பூலாய் – கேமரன் மலை சாலையில் உள்ள ஓராங் அஸ்லி பூர்வக்குடி மையத்துக் கொல்லையருகே, மனித உடல் அடங்கிய பொட்டலமொன்று நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டது.
அங்குள்ள ஆற்றில் மரத்தில் சிக்கியவாறு அது கிடந்ததாக ஓர் ஆடவர் போலீஸில் புகார் செய்தார்.
சம்பவ இடம் விரைந்த பேராக் போலீஸின் தடயவியல் துறை, சடலத்தை மீட்டு சோதனைக்காக எடுத்துச் சென்றது.
சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
குற்ற அம்சங்கள் எதுவும் உள்ளனவா என்பதை சவப்பரிசோதனை அறிக்கை உறுதிச் செய்யும் வரை, அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.