
காசா, ஆகஸ்ட்-26 – காசாவின் தெற்கு பகுதியிலுள்ள ஒரு மருத்துவமனையில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் 5 பத்திரிகையாளர்களும் அடங்குவர் என காசா பொது பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இது ஒரு “துரதிஷ்டவசமான தவறு” எனக் கூறிய இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு, அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
“பத்திரிகையாளர்களின் பணியையும் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பொது மக்களின் உயிரை மதிப்பதாகவும் அவர் கூறிக் கொண்டார்.
ராய்ட்டர்ஸ், அசோசியேட்டட் பிரஸ் மற்றும் அல்-ஜசீரா ஆகிய ஊடகங்கள், உயிரிழந்த தங்களது பணியாளர்களுக்கு இரங்கல் தெரிவித்தன.
நாசர் மருத்துவமனை அருகே நடத்தப்பட்ட அத்தாக்குதல் தாக்குதலை குறித்து உடனடி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அப்பாவி பொது மக்கள் பாதிக்கப்படுவதில் வருத்தமடைவதாகவும், பத்திரிகையாளர்களை நோக்கி தாக்குதல் நடத்துவது தங்கள் குறிக்கோள் அல்ல எனவும் இஸ்ரேலிய இரணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஊடகக் கண்காணிப்பு அமைப்புகளின் படி, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நீடித்து வரும் இஸ்ரேலின் தாக்குதலில் சுமார் 200 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளதால், காசா போர் பத்திரிகையாளர்களுக்கு மிகப்பெரும் ஆபத்தான ஒன்றாக உள்ளது.