Latestமலேசியா

Rapid KL பயண அட்டைக் கட்டணங்களில் ஜனவரி 1 முதல் மாற்றம்

கோலாலாம்பூர், டிசம்பர் 16-குறிப்பிட்ட Rapid KL பயண அட்டைக் கட்டணங்களில் வரும் ஜனவரி 1 முதல் மாற்றங்கள் வருமென, தேசிய வசதிக் கட்டமைப்பு நிறுவனமான Prasarana Malaysia Berhad அறிவித்துள்ளது.

இந்த கட்டண மாற்றம், Rapid Kota, Rapid Kembara, Rapid Keluarga உள்ளிட்ட, சில குறுகிய கால மற்றும் சிறப்பு பயண அட்டைகளுக்கும் பொருந்தும்.

செயல்பாட்டு செலவின அதிகரிப்பு மற்றும் சேவை விரிவாக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்டு, இம்முடிவு எடுக்கப்பட்டதாக Prasarana விளக்கியது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் பொது போக்குவரத்துகளின் நீடித்தச் சேவையையும் நம்பகத்தன்மையையும் உறுதிச் செய்ய இக்கட்டண உயர்வு அவசியமென அது கூறிற்று.

எனினும், தினசரி பயணிகளுக்கான My50, மூத்த குடிமக்களுக்கான Rapid Emas மற்றும் Rapid Mesra சிறப்பு சலுகை அட்டைகளுக்கான கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை.

பயணிகள், இப்புதியக் கட்டண விவரங்களை Rapid KL-லின் அதிகாரப்பூர்வ பக்கங்களி பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

பயணிகளுக்கு மலிவான மற்றும் நம்பகமான போக்குவரத்து சேவையை வழங்கும் தனது கடப்பாட்டை Prasarana மறு உறுதிப்படுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!