Latestமலேசியா

The Golden Empire’s Youngest Champions of the Year 2025 – இளம் சாதனையாளர் விருது 2025

ஷா ஆலாம், ஆகாஸ்ட்-11- Golden Empire Media Malaysia நிறுவனத்தின் கலைமாமணி மகேந்திரன் நடராஜா ஏற்பாட்டில், அன்மையில் ஷா ஆலாம், மிட்லண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் The Golden Empire’s Youngest Champions of the Year 2025 – இளம் சாதனையாளர் விருது விழா நடைபெற்றது.

கல்வி, கலை, புத்தாக்கம், தலைமைத்துவம், விளையாட்டு, கலாச்சாரம் ஆகியத் துறைகளில் நாடளாவிய நிலையில் மிகச் சிறந்து விளங்கும் 8 முதல் 18 வயது வரையிலான இந்தியச் சிறார் மற்றும் பதின்ம வயதினரை கௌரவித்து அங்கீகரிப்பதே இவ்விழாவின் நோக்கமாகும்.
டத்தோ சூரிய பிரகாஷ், டத்தோ Dr ரவீ, டத்தோ கீதாஞ்சலி ஜி, டத்தோ வெங்கடேசன் பழனிசாமி ஆகியோர் நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகைப் புரிந்தனர்.

ஜோகூர், கோலாலம்பூர், பேராக், சிலாங்கூ ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மொத்த ம் 61 மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அவர்களில் சிலருக்கு மலேசிய சாதனைப் புத்தகம் மற்றும் கின்ன உலக சாதைனைப் புத்தகத்திலும் இடம் கிடைத்தது. விருதளிப்பின் முக்கியத்துவம் குறித்து ஏற்பாட்டாளர் மகேந்திரன் நடராஜா வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.

விருதுப் பெற்ற மாணவர்களில் ஐவர், அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
வழக்கமாக பெரியவர்களுக்கே இது போன்ற விருதளிப்புகள் நடைபெறும் நிலையில், சிறார்களுக்கும் பதின்ம வயதினருக்கும் நடைபெற்ற இந்த விருதளிப்பு வந்திருந்தோரின் பாராட்டுகளைப் பெற்றது.

சிறப்பம்சமாக, of Golden Empire Media Sdn Bhd நிறுவனத்தின் அறிமுக விழாவும் நடைபெற்றது.
முக்கியப் பிரமுகர்கள், மலேசியக் கலைஞர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என சுமார் 500 இதில் கலந்து கொண்டனர். நிகழ்வில் சரிகமபத புகழ் ஹேமித்ரா ரவிசந்திரன் மற்றும் Big Stage புகழ் ரூஹன் ரவீந்திரன் ஆகியோரின் சிறப்பு பாடல்களும் இடம் பெற்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!