
இஸ்கந்தர் புத்ரி, ஜன 27 – சனிக்கிழமை தொடங்கி நேற்றுவரை ஜோகூரில் Iskandar Puteriயில் மேற்கொள்ளப்பட்ட Operasi Noda நடவடிக்கையில் 26 தனிப்பட்ட நபர்களை போலீசார் கைது செய்தனர்.
Taman Bukit Indah, Mutiara Rini, Nusa Bestari மற்றும் Iskandar Puteri ஆகிய இடங்களில் 5 பொழுது போக்கு மையங்களிலும் மூன்று உடம்புப் பிடி நிலையங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டதாக இஸ்கந்தர் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் M. Kumaresan தெரிவித்தார்.
உள்நாட்டைச் சேர்ந்த ஆறு ஆடவர்களுடன் ஒரு பெண் உட்பட மியன்மார், வியட்னாம் , சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்ட 26 பேரில் அடங்குவர்.
அவர்களில் ஐவர் ஏற்கவே பல்வேறு குற்றச்செயல் பின்னணியை கொண்டுள்ளதாகவும் குமார் தெரிவித்தார்.
இந்த நடிவடிக்கையின்போது 5,616 , ரிங்கிட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.



