
கூச்சிங், அக்டோபர்-10 – சரவாக் கூச்சிங்கில் 3 வயது பெண் குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
குழந்தை புதன்கிழமை இரவு சுமார் 9.45 மணியளவில் சரவாக் பொது மருத்துவமனைக்கு மயக்க நிலையில் கொண்டு வரப்பட்டது.
பரிசோதனையில் குழந்தையின் உடலில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
அக்காயங்கள், அடித்ததால் ஏற்பட்டதாக இருக்கலாம் என போலீஸார் நம்புகின்றனர்.
இதையடுத்து 32 வயது ஆண், அதாவது குழந்தையின் தாயின் காதலர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
அவ்வாடவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததும் உறுதியாகியுள்ளது.
கொலைக் குற்ற விசாரணை நடைபெறுவதால், சமூக ஊடகங்களில் யூகங்கள் பரப்பி இடையூறு விளைவிக்க வேண்டாம் என பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.