Latestமலேசியா

தனியார் மற்றும் அனைத்துலகப் பள்ளிகளில் மலாய், வரலாறு கட்டாய பாடங்களாக மாறுவதை உறுதிச் செய்ய பிரதமர் உத்தரவு

கோலாலாம்பூர், செப்டம்பர்-30,

மலாய் மொழி, வரலாறு போன்ற முக்கிய பாடங்களுக்கு, தனியார் மற்றும் அனைத்துலகப் பள்ளிகளிலும் கட்டாயமாக முன்னுரிமைத் தரப்பட வேண்டுமென, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கான நடவடிக்கைகளை உயர் கல்வி அமைச்சும் கல்வி அமைச்சும் இணைந்து விவாதிக்குமாறு தாம் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மறுஆய்வுச் செய்யப்படும் பொது பாடங்கள், புதிய உள்ளடக்கம், அணுகுமுறை மற்றும் எண்ணிக்கைகளுடன், தேசிய உணர்வையும் உணர்ச்சியையும் வலுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படும் என்றார் அவர்.

இப்பரிந்துரை, பல்கலைக்கழகங்கள், MQA, AKEPT, SPRM மற்றும் தற்காப்பு அமைச்சு உள்ளிட்ட பல தரப்பினருடன் ஆலோசிக்கப்பட்டு, அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இந்த மாற்றங்கள் பல்கலைக்கழகங்கள் மட்டுமல்ல, அனைத்து பயிற்சிக் கழகங்களுக்கும் விரிவாக்கப்படும் என அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!