
கோலாலம்பூர், செப்டம்பர்-8 – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா, பாதுகாவலர்களுடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபடும் வீடியோக்கள் வைரலாகியுள்ள நிலையில், Suria KLCC வணிக வளாகம், தனது பாதுகாப்பு குழுவின் நடவடிக்கையைத் தற்காத்துள்ளது.
வீடியோவில் இருப்பதாகக் கூறப்படும் நபர் “நீளமான மரக் கம்பு” ஒன்றை உள்ளே கொண்டுச் செல்ல முயன்றதாலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்.
வருகையாளர்களின் பாதுகாப்பே முக்கியம்.
இது வழக்கமான பாதுகாப்பு நடைமுறையே; அரசியல் நோக்கம் எதுவுமில்லை என Suria KLCC விளக்கியது.
ஆனால், சம்பவத்தை வீடியோவில் பதிவுச் செய்தவர்கள், தியான் சுவா பாலஸ்தீன் கொடி ஏந்தியதற்காக முரட்டுத்தனமாகக் கையாளப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பின் மலேசிய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் “Trump Don’t Come” பேரணியில் கலந்துகொண்ட பிறகே, பாலஸ்தீன ஆதரவாளர்களிடம் Suria KLCC பாதுகாவலர்கள் முரட்டுத்தனம் காட்டியதாக அவர்கள் கூறிக் கொண்டனர்.
பதாகைகள் ஏந்தியவர்கள் கூட உள்ளே அனுமதிப்படவில்லை என அக்குழுவினர் குற்றம் சாட்டினர்.
சாதாரணமாக பேசித் தீர்க்க வேண்டியதை பாதுகாவலர்கள் பெரிதாக்கி விட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.