
கெனிங்காவ், டிசம்பர்-8 – சபா, கெனிங்காவில் பதின்ம வயது சிறுவன்களின் கண்ணாமூச்சி விளையாட்டு உயிர் பலியில் முடிந்திருக்கிறது.
வீட்டின் முன்புறத்தில் விளையாட்டில் ஈடுபட்டபோது, ‘bakakuk’ எனப்படும் வீட்டில் சொந்தமாக தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் நண்பன் தவறுதலாக சுட்டான்.
வெறும் 3 மீட்டர் தூரத்திலிருந்து சுடப்பட்டதில், 14 வயது பையனின் நெஞ்சு, கை, முழங்கால் உள்ளிட்ட பகுதிகளில் 14 குண்டுள் பட்டு அவன் சரிந்து விழுந்தான்.
கிராமத்து மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற நிலையில், அவன் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதிச் செய்தனர்.
தவறுலாக துப்பாக்கியால் சுட்ட நண்பன், துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த அவனது தம்பி, துப்பாக்கி உரிமையாளரான 70 வயது தந்தை என மூவரைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
இது, கொலைச் சம்பவமாக வகைப்படுத்தப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.



