
மணிலா, ஜன 26 – தென் பிலின்பைன்ஸில் பசிலான் மாநிலத்தில் 300 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பெர்ரி கவிழ்ந்ததில் குறைந்தது எழுவர் மரணம் அடைந்தாக கரையோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று அதிகாலையில் Zambonga துறைமுக நகரிலிருந்து தென் பிலின்பைன்ஸின் ஜோலோவுக்கு 332 பயணிகள் மற்றும் 27 ஊழியர்களுடன் அந்த பெர்ரி புறப்பட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.
பெர்ரி கவிழ்ந்ததைத் தொடர்ந்து 215 பேர் காப்பாற்றப்பட்ட வேளையில் எழுவரின் உடல்களும் கண்டுப்பிடிக்கப்பட்டது.
இன்னமும் காணவில்லையென அறிவிக்கப்பட்ட இதர 144 பேரை தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக தென் மின்டானோ மாவட்டத்தின் கடலோர காவல் படையின் கமாண்டர் ரேமெல் டுவா ( Romel Dua) தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.



