
தெலுக் இந்தான், அக்டோபர்-26,
தெலுக் இந்தான் அருகே கம்போங் திரங்கானுவில் நேற்று பின்னிரவில் ஏற்பட்ட தீயில் 6 வீடுகள் அழிந்துபோயின.
தகவல் கிடைத்த 5 நிமிடங்களில் தீயணைப்பு – மீட்புத் துறை சம்பவ இடம் விரைந்தது.
அதிகாலை 1 மணிக்கெல்லாம் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, விடியற்காலை 3 மணிக்கு முழுவதுமாக அணைக்கப்பட்டது.
தீயில் 6 வீடுகளும் கிட்டத்தட்ட 90% உருக்குலைந்துபோயின.
3 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து சாம்பலாகின.
எனினும் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் தற்காலிகமாக தெலுக் இந்தான் நகராண்மைக் கழக மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீக்கான காரணம் ஆராயப்பட்டு வரும் வேளை, மொத்த இழப்பும் மதிப்பிடப்படு வருகிறது.



