Latest

நன்றி, என் அழகான மனைவியே! இந்திய வம்சாவளி உஷாவுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி பாராட்டினார் துணையதிபராகும் J.D.Vance

வாஷிங்டன், நவம்பர்-7 – அமெரிக்க அதிபர் தேர்தலில் டோனல்ட் டிரம்ப் வரலாற்று வெற்றியைப் பதிவுச் செய்துள்ள நிலையில், துணையதிபராக J.D.Vance பொறுப்பேற்கிறார்.

ட்டிரம்பின் துணையதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் 39 வயது J.D.Vance அவ்வளவாகப் பேசப்படாத நிலையில், தற்போது அவரின் மனைவி மீது ஊடகங்களின் கவனம் திரும்பியுள்ளது.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு, ‘என் அழகான மனைவிக்கு நன்றி’ என Vance நெகிழ்ச்சியுடன் கூறிய வீடியோக்கள் வைரலாகியுள்ளன.

Usha Chilukuri Vance ஓர் இந்திய அமெரிக்க வழக்கறிஞர் என்பதே அதற்கு காரணம்.

முந்தையத் தேர்தலில் கமலா ஹாரிஸ், முதல் இந்திய வம்சாவளி துணையதிபராக பெயர் பதித்த நிலையில், தற்போது உஷா முதல் இந்திய வம்சாவளி இரண்டாம் பெண்மணி (Second Lady) என்ற பெருமையைப் பெறுகிறார்.

அதிபரின் மனைவி முதல் பெண்மணி என்றும் துணையதிபரின் மனைவி இரண்டாம் பெண்மணி என்றும் அழைக்கப்படுவது வழக்கமாகும்.

ஓர் இந்துவான 38 வயதே நிரம்பிய உஷா, கலப்புத் திருமணத்தின் மூலம் ஏற்கனவே ஊடகங்களில் பேசப்பட்டவர் ஆவார்.

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட உஷாவின் பெற்றோர், வேலைத் தேடி அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தனர்.

சாண்டியாகோ (San Diego) புறநகர் பகுதியில் வளர்ந்த உஷா, சிறுவயது முதலே படிப்பில் கெட்டிக்காரி என்பதோடு தலைமைத்துவ ஆற்றல் கொண்டவர்.

Yale சட்டக் கல்லூரியில் படிக்கும் போது Vance-சுடன் காதல்வயப்பட்ட உஷா 2014-ல் அவரை திருமணம் செய்துகொண்டார்.

தனியாக இந்து முறைப்படியும் அவர்களின் திருமணச் சடங்கு நடைபெற்றது.

அவர்களுக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!