
சன் பிரான்சிஸ்கோ, ஜன 8 – கலிபோர்னியாவில் ஆடம்பரமான குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட மோசமான காட்டுத் தீயை தொடர்ந்து அங்கிருந்து சுமார் 30,000 பேர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். Santa Monica மற்றும் Malibu பகுதிக்கிடையே 500 ஹெக்டர் நிலம் அழிந்தது. மணிக்கு 80 முதல் 130 கிலோமீட்டர் வேகத்திற்கு காற்று வீசுக்கூடும் என்பதால் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தீ விரைவாக பரவியதால் மக்களின் குடியிருப்பு பகுதிகள் அழிந்ததால் போக்குவரத்து பிரச்சனையும் ஏற்பட்டது. தீயை அணைப்பதற்கு வான் பகுதியிலிருந்து நவீன மயமான கருவிகளும் பயன்படுத்தப்பட்டன. இதுவரை உயிர்ச்சேதம் மற்றும் காயம் அடைந்தவர்களைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.