
நீலாய், டிசம்பர்-28 – நெகிரி செம்பிலான், நீலாயில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 62 வயது முதியவர், போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
டிசம்பர் 22-ஆம் தேதி, டேசா பால்மா குடியிருப்பு பகுதியில், IED எனப்படும் சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட குண்டு வெடித்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அவ்வாடவர் மந்தினில் கைதானார்.
கைதுச் செய்யப்படும் போது அவர் காயமடைந்த நிலையில் இருந்ததால், போலீஸ் கண்காணிப்பில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
அவருடன் தொடர்புடைய வாடகை வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 30-க்கும் மேற்பட்ட IED வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக அழிக்கப்பட்டன.
நிலைமை முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதோடு, விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, வதந்திகளை தவிர்க்கவும், விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் முழு ஒத்துழைப்பு வழங்கவும் பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.



