Latest
பத்து பஹாட்டில் பயங்கரம்; கழுத்து அறுக்கப்பட்டு 6 வயது சிறுவன் படுகாயம்

பத்து பஹாட், அக்டோபர்-28,
ஜோகூர், பத்து பஹாட்டில் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் அறுக்கப்பட்ட நிலையில், 6 வயது சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அதிகாலை பாரிட் ராஜாவில் உள்ள ஒரு வீட்டில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
அதிகாலை 5.30 மணிக்கு கண்விழித்த போது மகனின் வலப்பக்க கழுத்து கத்தியால் அறுக்கப்பட்டது கண்டு 40 வயது தாய் பதறிப் போனார்.
பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவனது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
தாய் போலீஸில் புகாரளித்துள்ளதை அடுத்து விசாரணையும் தொடங்கியுள்ளது.
என்றாலும் சம்பவத்துக்கான காரணத்தை இப்போதே கண்டறிவது சாத்தியமலல்ல என பத்து பஹாட் போலீஸ் கூறிற்று



