
கோலாத்திரெங்கானு , ஜன 20 – கோலாத் தெரங்கானு (KUALA TERENGGANU) டுங்குனில் (Dungun ) உள்ள Pantai Sura வில் கரையொதுங்கிய கிளிஞ்சல்களின் மாதிரிகளின் ஆய்வில் மேற்கொண்ட சோதனையில் கோலிஃபார்ம் பாக்டீரியா (coliform bacteria ) மற்றும் எஸ்கெரிச்சியா கோலி (ஈ. கோலி) (Escherichia coli) அளவுகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தை மீறுவதாகக் காட்டியுள்ளன.
பகாங்கில் உள்ள குவாந்தன் மீன்வள உயிரியல் பாதுகாப்பு கூடத்தின் ஆய்வில், கடந்த புதன்கிழமை சேகரிக்கப்பட்ட கிளிஞ்சல்கள் மாதிரிகளில் கோலிஃபார்ம் (Coliform) அளவு 300 MPN /100 கிராம் மற்றும் ஈ.கோலி அளவு 230 MPN /100 கிராம் தாண்டியுள்ளது என திரெங்கானு மீன்வளத்துறையின் இயக்குநர் ருஸ்டி மாமாட் ( Ruzaidi Mamad )கூறினார்,
2014, 2016, 2019, 2021 ஆம் ஆண்டுகளில் கழுவப்பட்ட கிளிஞ்சல்களின் ஆய்வு மற்றும் 2025 ஆம் ஆண்டின் அண்மையில் மாதிரிகளில் கோலிஃபார்ம் மற்றும் ஈ. கோலி அளவுகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தைவிட அதிகமாக இருப்பதை காட்டுகிறது.
இந்த கிளிஞ்சல்களை உட்கொள்வதற்கு முன் முழுமையாக சமைக்க வேண்டும் என நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.