Latestமலேசியா

பயனர்களுக்கு கூடுதல் தேர்வு: e-hailing சேவையைத் தொடங்கிய Lalamove

கோலாலம்பூர், நவம்பர்-12 – பொருட்களை அனுப்பும் e-courier சேவை வழங்குநரான Lalamove, புதிதாக e-hailing சேவையையும் தொடங்கியுள்ளது.

அப்புதிய Lalamove Ride பயணச் சேவைக்கு, நடப்பிலுள்ள Lalamove செயலியிலேயே பயனர்கள் முன்பதிவு செய்ய முடியுமென, முகநூல் வாயிலாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்சமயம் கிள்ளான் பள்ளத்தாக்குக்கு உட்பட்ட பகுதிகளுக்கு செடான் கார் பயணங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன.

தங்களின் சேவைப் புதுப்பிக்கப்படும் வரை, மற்ற நகரங்களைச் சேர்ந்தவர்கள் சற்று காத்திருக்க வேண்டுமென Lalamove கேட்டுக் கொண்டது.

உச்ச நேரங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது, அடை மழை மற்றும் வெப்பக் காலத்தின் தாக்கம் போன்று, கிள்ளான் பள்ளத்தாக்கில் e-hailing பயணிகள் எதிர்நோக்கும் சவால்களுக்கு கூடுதல் தீர்வாக, தாங்கள் சந்தையில் நுழைந்திருப்பதாக Lalamove நிர்வாக இயக்குநர் Jane Teh கூறினார்.

தினசரி பயணத்தை உருமாற்றி அனைவருக்கும் வசதிப்படும் தேர்வை வழங்குவதே தங்களின் நோக்கம் என்றார் அவர்.

வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும் அதே வேளை, கூடுதல் வருமானமீட்ட ஓட்டுநர்களுக்கும் வாய்ப்பை வழங்குகிறோம்.

e-hailing சேவையையும் பொருட்களை அனுப்பும் சேவையையும் அவர்கள் மாற்றி மாற்றி மேற்கொள்ள முடியும் என Jane கூறினார்.

கடந்த வாரம் தான், ஐரோப்பிய e-hailing சேவை நிறுவனமான Bolt மலேசிய சந்தையில் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!