Latestமலேசியா

பாகான் செராயில் லாரி -மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் போலீஸ்காரர் மரணம்

பாகான் செராய், ஆகஸ்ட்-15 – பேராக், பாகான் செராயில் போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள் லாரியுடன் உரிசியதில் ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்தார்.

Taman Selinsing Indah முன்புறம் Jalan Ipoh – Butterworth சாலையில் புதன்கிழமை மாலை 6 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

மரணமடைந்தவர், பாகான் செராய் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 23 வயது கான்ஸ்டபிள் Muhammad Hakim Daniel Ruhiman என அடையாளம் கூறப்பட்டது.

பாகான் செராயிலிருந்து தைப்பிங் செல்லும் வழியில் அவரின் Honda EX5 , அதே பாதையில் சென்ற லாரியுடன் மோதியது.

அதில் இடுப்பு மற்றும் கால்களில் படுகாயமடைந்த Hakim, தைப்பிங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் போது உயிரிழந்தார்.

சம்பவ இடத்தில் இருந்த CCTV கேமரா பதிவு மற்றும் விபத்தைப் பார்த்த மற்ற வாகனங்களை, விசாரணைக்காக தற்போது போலீஸ் அடையாளம் கண்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!