Latestஉலகம்

பாகிஸ்தானில் டயர் வெடித்து பேருந்து குடை சாய்ந்தது; குறைந்தது 8 பேர் பலி

இஸ்லாமாபாத், ஜூலை-28- கிழக்கு பாகிஸ்தான் மாநிலமான பஞ்சாப்பில் நெடுஞ்சாலையில் டயர் வெடித்து பேருந்துக் கவிழ்ந்ததில், குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர்.

18 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.

நேற்றுக் காலை தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து லாகூர் (Lahoore) நகருக்கு 40 பயணிகளை ஏற்றிச் செல்லும் வழியில், பேருந்தின் டயர் திடீரென வெடித்தது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து குடை சாய்ந்தது.

6 பேர் சம்பவ இடத்திலும் 2 பேர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 7 பேருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!