
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்- 27,
இவ்வாண்டு கெடா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட 100 சிறார் கற்பழிப்பு (Statutory Rape) வழக்குகளில் 91 வழக்குகள், இணக்கத்துடன் கூடிய பாலியல் உறவு என்று கெடா மாநில போலீஸ் தலைவர் அட்ஸ்லி அபு ஷா (Adzli Abu Shah) தெரிவித்துள்ளார்.
இளம் தலைமுறையினர் பாலியல் உறவுகளில் ஈடுபடுவது கவலைக்கிடமான நிலைமை என்றும், இதனைத் தடுக்க பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அரசாங்க அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது.
முந்தைய காலக்கட்டங்களைப் போல, அண்டை வீட்டார் ஒருவருக்கொருவர் கவனித்துக் கொண்ட சமூக மனப்பான்மையை மீண்டும் உருவாக்குவதன் மூலம் பாலியல் குற்றங்களைக் குறைக்கலாம்.
இதற்கு முன்னதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் யூசோப் மாமட் (Yusoff Mamat) இருவரும் சம்மதத்துடன் பாலியல் உறவில் ஈடுபட்டால், சிறுமிகளும் சட்ட ரீதியாக பொறுப்பேற்க வேண்டும் என்பதைப் பரிந்துரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



