
கிள்ளான், அக் 23 – கடை வீடு ஒன்றில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் பாலியல் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வந்த வியட்னாமைச் சேர்ந்த எழு பெண்கள் மீட்கப்பட்டனர். இரவு மணி 11.23 அளவில் தொடங்கிய அந்த சோதனை நடவடிக்கையின்போது 32 முதல் 45 வயதுடைய அந்த பெண்கள் அனைவரும் பாதுகாப்புடன் மீட்கப்பட்தாக குடிநுழைவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அந்த கடை வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட அப்பெண்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய மறுத்தால் அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. அவர்கள் அனைவரும் நாட்டிற்கு சுற்றுப்பயணிகளாக வந்தவர்களாவர். குடிநுழைவு அதிகாரிகளின் மேற்கொண்ட சோதனையின்போது அந்த கடை வீட்டின் பராமரிப்பாளரான வங்காளதேச ஆடவன் கதவை திறக்கத் தவறியதால் வேறு வழியின்றி கட்டாயமாக கதவை அதிகாரிகள் உள்ளே புகுந்தனர். சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்ட அந்த கடை வீட்டில் தீவிர கண்காணிப்பாராக இருந்து வந்த ஆடவன் அந்த கடை வீட்டின் இரண்டாவது மாடியிலுள்ள ஜன்னல் மூலமாக தப்ப முயன்றதாகவும் குடிநுழைவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.