
ஜியோர்ஜ்டவுன், அக்டோபர்-22 – பினாங்கு, ஜியோர்ஜ்டவுன், பூலாவ் தீக்கூசில் உள்ளுர் ஆடவரால் பாகிஸ்தானிய ஆடவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
நேற்று மாலை 5 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்ததாக, தீமோர் லாவோட் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் லீ சுவீ சேக் (Lee Swee Sake) தெரிவித்தார்.
இரத்த வெள்ளத்தில் கிடந்த 48 வயது அவ்வாடவரை சிகிச்சைக்காக நண்பர்கள் ஜாலான் டத்தோ கெராமாட்டில் உள்ள தனியார் கிளினிக் கொண்டுச் சென்றனர்.
எனினும் சிகிச்சைப் பலனளிக்காது அவர் மரணமடைந்தார்.
இதையடுத்து சவப்பரிசோதனைக்காக அவரின் உடல் பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
கொலையாளியைத் தேடி வரும் போலீஸ், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகிறது.