
கோலாலம்பூர், ஜனவரி-22- மலேசியர்கள் அனைவரும் பிற சமூகங்களின் உணவு விருப்பங்களை மதிக்க வேண்டும் என, சரவாக்கை சேர்ந்த Puncak Borneo நாடாளுமன்ற உறுப்பினர் Willie Mongin வலியுறுத்தியுள்ளார்.
டாயாக் சமூகத்தினர் பன்றி இறைச்சி சாப்பிட்டாலும், ஒருபோதும் பிறரின் உணவுகளை விமர்சிக்கவில்லை.
_”மற்றவர்களைப் போல் நாங்கள் லஞ்சம் வாங்குவதிலை, போதைப்பொருள் பயன்படுத்துவதில்லை. ஆனால், பன்றி இறைச்சி சாப்பிடுகிறோம் என்ற ஒரே காரணத்தால் நாகரீகமற்றவர்கள் என நாங்கள் இழிவாகப் பார்க்கப்படுகிறோம்”_
குறிப்பாக சமூக ஊடகங்களில் பன்றி இறைச்சியை ‘துர்நாற்றம்’ மற்றும் ‘அழுக்கு’ என்று கூறி மற்றவர்கள் அவமதிப்பது தவறாகும் என அவர் கண்டனம் தெரிவித்தார்.
_“பன்றி இறைச்சியில் வாடை இருந்தாலும், புடு (Budu) மற்றும் பெலாச்சான் இன்னும் அதிக துர்நாற்றம் கொண்டவை. ஆனால் நாங்கள் ஒருபோதும் அவற்றை இழிவாகச் சொல்லவில்லையே”_ என அவர் குறிப்பிட்டார்.
அனைவரும், ஒருவரின் பாரம்பரிய உணவுகளை மதித்து, மாமன்னரின் அறிவுறுத்தலின்படி ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என, நேற்று மக்களவையில் பேசிய போது Willie Mongin வலியுறுத்தினார்.



