
கோலாலம்பூர், டிச 26 – 2026 புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, Rapid K.L அதன் ரயில் சேவை இயக்க நேரத்தை அடுத்த புதன்கிழமை அதிகாலை 2 மணி வரை நீட்டிக்கும்.
மேலும், பிஆர்டி சன்வே லைன், தேர்ந்தெடுக்கப்பட்ட பேருந்து வழித்தடங்கள் மற்றும் ரேபிட் கேஎல் ஆன்-டிமாண்ட் (ஆர்ஓடி) சேவைகள் ஜனவரி 2026, ஜனவரி 1 ஆம்தேதியன்று அதிகாலை 2.30 மணி வரை செயல்படும்.
கொண்டாட்டங்களுக்குப் பிறகு பாதுகாப்பான, கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் சீரான பயணிகளின் இயக்கத்தை உறுதி செய்வதையும், பயனர்கள் தங்கள் திரும்பும் பயணங்களை மிகவும் திறமையாக திட்டமிட உதவுவதையும் நோக்கமாகக் கொண்டு சேவைகளின் நேரம் நீட்டிக்கப்பட்டிருப்பதாக பிரசரானா மலேசியா பெர்ஹாட்
வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
நீட்டிக்கப்பட்ட நேரம் 20 ரயில் நிலையங்கள், ஏழு BRT நிலையங்கள், 21 முக்கிய பேருந்து வழித்தடங்கள், விரைவு KL பீடர் சேவைகள் மற்றும் ஒன்பது ROD மண்டலங்களுக்கு பொருந்தும்.



