
கோலாலம்பூர், ஜூலை 9 — கடந்த ஜூலை 4 ஆம் தேதி, செப்பாங் சாலாக் திங்கி மாரியம்மன் ஆலயத்திற்கு சென்ற 27 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரிடம் பாலியல் சேட்டை செய்த பூசாரியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர் என்று செப்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நோர்ஹிசாம் பஹாமன் கூறியுள்ளார்.
சந்தேக நபர் இந்திய நாட்டைச் சார்ந்தவன் என்றும், கோயிலின் நிரந்தர பூசாரி தற்போது வெளிநாட்டில் இருப்பதால் அவருடைய இடத்தை தற்காலிகமாக இந்த காமுகன் நிரப்பி வந்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பு அவரது முகம் மற்றும் உடலில் புனித நீரைத் தெளிக்கும் போலி சடங்கு ஒன்றை அவன் நிகழ்த்தியுள்ளான்.
குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் கூடிய அபராதமும் சவுக்கடியும் விதிக்கப்படுமென்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
சந்தேக நபரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள், விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் சத்தியன் பால்ராஜூவை உடனே தொடர்புக்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.