Latestமலேசியா

பேரரசரை சிறுமைப்படுத்தி அவதூறாக பேசியதாக குடும்ப மாது மீது குற்றச்சாட்டு

ஷா அலாம் , ஜூலை 7 – தனது முகநூல் கணக்கு மூலம் கடந்த மாதம் பேரரசர் Sultan Ibrahim அவர்களை சிறுமைப்படுத்தி மற்றும் அவதூறன தகவல் தொடர்புகளை அனுப்பியதாக குடும்ப பெண் ஒருவர் மீது ஷா அலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

நீதிபதி Norazlin Othman முன்னிலையில் 39 வயதான Suhaila Abdul Halim மீது குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

எனினும் அப்பெண் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.

Suhaila தெரிந்தே மற்றவர்களை காயப்படுத்தும் நோக்கத்துடன் ஆபாசமான அவதூறான கருத்துக்களை பதிவிட்டு அனுப்பியுள்ளார்.

ஜனவரி 4 ஆம் தேதி வெளியிடப்பட்ட அவரது பதிவு , ஜனவரி 5 ஆம் தேதி காலை 8.30 மணியளவில் சுங்கை பூலோ மருத்துவமனையில் காணப்பட்டது

இதனைத் தொடர்ந்து ஆறு குழந்தைகளுக்கு தாயான Suhaila மீது 1998 ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233(1)(a) இன் கீழ் [சட்டம் 588] அதே சட்டத்தின் பிரிவு 233(3) இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது.

மாதத்திற்கு ஒரு முறை குடியிருப்புக்கு அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்பதோடு, வழக்கு முடியும் வரை அரசு தரப்பு சாட்சிகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்ற கூடுதல் நிபந்தனைகளுடன் 10,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது.

பின்னர் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கும் வழக்கறிஞரை நியமிப்பதற்கும் இந்த குற்றச்சாட்டு மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுப்பதற்கு செப்டம்பர் 17 ஆம் தேதிக்கு நீதிமன்றம் நிர்ணயித்தது.

அவர் மீதான குற்றஞ்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 50,000 ரிங்கிட்டிற்கு மேற்போகாத அபராதம் , அல்லது ஒரு ஆண்டிற்கு மேற்போகாத சிறைத்தண்டனை அல்லது இவையிரண்டும் விதிக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!