Latest
மக்கோத்தா இடைத்தேர்தல்: சிங்கப்பூரில் உள்ள வாக்காளர்களும் தாயகம் திரும்புவதை எளிதாக்க CIQ-யின் அனைத்து முகப்புகளும் திறக்கப்படும்
ஜோகூர் பாரு, செப்டம்பர் 25 – சிங்கப்பூரில் பணிபுரியும் அல்லது வசிக்கும் மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தலின் வாக்காளர்கள், இந்த சனிக்கிழமை வாக்களிக்கத் திரும்புவதற்கு வசதியாக, Tambak Johor மற்றும் Linkedua-வில் உள்ள இரண்டு தேசிய நுழைவு வாயில்களில் உள்ள அனைத்து முகப்புகளும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை தொடங்கி சுங்கம், குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தும் முகப்புகள் செயல்படும் சுல்தான் இஸ்கண்டார் கட்டிடம், மற்றும் இஸ்கண்டார் புத்தேரியில் உள்ள சுல்தான் அபு பக்கார் வளாகமும் முழுமையாக செயல்படும் என்று மெந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபிஸ் (Datuk Onn Hafiz) தெரிவித்தார்.