
செப்பாங், டிசம்பர்-9 – மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனமான AKPS, KLIA சரக்கு வளாகத்தில் நடத்திய சோதனையில் 1.75 டன் எடையிலான புத்தம் புதிய பச்சை மிளகாய்களை பறிமுதல் செய்துள்ளது.
மலாக்காவைத் தளமாகக் கொண்ட ஒரு நிறுவனம், வங்காளதேசத்திலிருந்து அம்மிளகாய்களை இறக்குமதி செய்துள்ளதாக தெரிய வருகிறது.
ஆனால், உரிய அனுமதி ஆவணங்கள் இல்லாமல் அவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன; எனவே சுங்கச் சட்டம் மற்றும் தாவரத் தனிமைப்படுத்தல் விதிகளின் கீழ் அவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சட்டவிரோத இறக்குமதியில் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நாட்டின் விவசாயப் பாதுகாப்பை உறுதிச் செய்யவும், சட்டவிரோத கடத்தலை தடுக்கும் நோக்கிலும், அனைத்து நுழைவாயில்களிலும் கண்காணிப்பு வலுப்படுத்தப்படுமென AKPS உறுதியளித்துள்ளது.



