மலாய் மொழியை ஏற்க முடியாவிட்டால் மலேசியாவில் வாழ வேண்டாம் – மாமன்னர்

கோலாலம்பூர், ஜனவரி 19 – தேசிய மொழியான மலாய் மொழியை ஏற்க முடியாதவர்கள் மலேசியாவில் வாழ வேண்டாம் என்று நாட்டின் மாமன்னர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தேசிய கல்வி முறை மிகவும் முக்கியம் என்றும் இது நாட்டின் அடையாளத்தை உருவாக்குவதோடு, எதிர்காலத்தை பாதுகாக்கவும் செய்யும் என்றும் அவர் மேலும் கூறினார்.
புதிய கல்வி முறைகள் மலாய் மொழியை முக்கிய மொழியாக கொண்டிருக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் நாட்டின் வரலாற்றையும் மதிக்க வேண்டும் என்றும் மன்னர் அறிவுறுத்தினார்.
இதற்கு முன்பு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வேறு மொழிகளை முன்னிலைப்படுத்த விரும்பும் எந்தவொரு கட்சியும், மலாய் மொழியையும் மதித்து அதனை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
சீன சுயாதீன பள்ளிகளில் மாணவர்களுக்கான UEC சான்றிதழ் சில மாநிலங்களில் ஏற்கப்படுகின்ற நிலையில் மத்திய அரசுப் பல்கலைக்கழகங்களில் அல்லது பணிகளில் ஏற்கப்படுவதில் சில சிக்கல்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.



