
கோலா பெராங், ஜன 20 – சமூக வலைத்தளத்தின் மூலம் அறிமுகமான ஒருவரை சந்தித்த கேக் தொழிற்சாலை ஊழியர் இல்லாத முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ததன் மூலம் 166,000 ரிங்கிடை இழந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதி அறிமுகமான அந்த ஆடவரின் வாக்குறுதியை நம்பி பாதிக்கப்பட்ட நபர் இந்த பணத்தை ஏமாந்துள்ளார் என உலு திரெங்கானு போலீஸ் தலைவர் Superintedan Sharudin Abdul Wahab தெரிவித்தார்.
முதலீட்டுத் திட்டத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்று அந்த ஆடவர் கூறியதை நம்பியதோடு , அவர் வழங்கிய வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் 16 முறை பணப் பட்டுவாடா செய்துள்ளார்.
எனினும் வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கு ஏற்ப எந்தவொரு லாபத் தொகையையும் தனக்கு கிடைக்காததால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபர் Ajil போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 420 ஆவது விதியின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக Sharudin கூறினார்.



