Latestமலேசியா

மொட்டைக் கை ஆடை அணிந்ததால் மருத்துவமனைக்குள் நுழைய தடை -பெண் குற்றச்சாட்டு

கோலாலம்பூர், செப்- 26,

மொட்டைக் கை எனப்படும் Sleeveless ஆடையை அணிந்திருந்ததால் சைபர் ஜெயா மருத்துவமனைக்குள் உள்ளே நுழைவதற்கு அதன் பாதுகாப்பு குழுவினர் தடை விதித்ததாக பெண்மணி ஒருவர் சமூக ஊடகங்களில் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த இந்த சம்பவம் நெட்டிசன்களிடமிருந்து கோபத்தை தூண்டியுள்ளதோடு , அவர்கள் இந்த நடவடிக்கையை அதிகப் பட்சமானது மற்றும் தேவையற்றது என சாடினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 21ஆம் தேதி தனது சகோதரரைப் பார்க்க போர்ட் டிக்சனில் இருந்து சைபர்ஜெயா மருத்துவமனைக்குச் சென்றதாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அவர் அங்கு சென்றபோது ​​இரண்டு பெண் பாதுகாவலர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. ஸ்லீவ்லெஸ் எனப்படும் மொட்டைக்கை ஆடை அணிந்திருந்ததே இதற்கான காரணம் என அவர்கள் கூறியதோடு எனது கைகள் தெளிவாகத் தெரிந்ததாக அவர்கள் நம்பினர். தாம் அடக்கமாக மற்றும் பொருத்தமான உடை அணிந்திருந்ததால், பாதுகாவலர்களின் இந்த தடையினால் தாம் அதிர்ச்சி அடைந்ததோடு எனது உடையில் எந்தத் தவறும் இல்லை என்பதை தாம் தெளிவுபடுத்தியபோதிலும் அவர்கள் தங்களது முடிவில் உறுதியாக இருந்தனர். மருத்துவமனைகள் கட்டொழுங்கை பேண வேண்டியதன் அவசியத்தை புரிந்துகொண்டாலும், அந்த சம்பவம் கடுமையான கட்டுப்பாடு மற்றும் பாகுபாட்டை கொண்டிருந்ததாக அந்த பெண் ஏமாற்றம் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!