Latestமலேசியா

ரோம நாகரீகம் கப்பல் கட்டுமானத்தை மலாய்க்காரர்களிடமிருந்தே கற்றுக் கொண்டது; ‘பிடிவாதமாக’ தற்காக்கும் UIA பேராசிரியர்

 

 

கோம்பாக், நவம்பர்-10,

பண்டைய ரோம நாகரீக மக்கள் கப்பல் கட்டும் நுட்பங்களை மலாய் மாலுமிகளிடமிருந்தே கற்றுக்கொண்டனர் என்ற தனது சர்ச்சைக்குரிய கூற்றை, UIAM எனப்படும் அனைத்துல மலேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக பேராசிரியர் Dr சோலேஹா யாக்கோப் (Dr. Solehah Yaacob) தற்காத்துப் பேசியுள்ளார்.

தனது இந்த ஆய்வு பாரம்பரிய அரபு மூலங்களை அடிப்படையாகக் கொண்டது என்றும், இது 2005-ஆம் ஆண்டு முதல் தான் மேற்கொண்ட ‘விரிவான ஆய்வு’ மூலம் உருவாக்கப்பட்ட ஒரு கருதுகோள் என்றும், அரபு மொழி விரிவுரையாளரான அவர் கூறிக் கொண்டார்.

மலாய் மக்கள் உண்மையில் ஒரு தொடர்ச்சியான கடல்சார் நாகரீகமாக இருந்தனர்.

ஆனால், ரோமானியப் பேரரசோ கி.மு 31 க்குப் பிறகுதான் குறிப்பிடத்தக்க அனைத்துலகக் கடல் பயணங்களில் ஈடுபட்டது.

மேலும், அவர்கள் உயர்தர இரும்பைத் தேடிய போது, பண்டைய கெடா பகுதியிலுள்ள ‘கலா’ (Qalʿa) எனும் இடத்திலில் அது கிடைத்ததாக இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர் என்றும் அவர் கூறுகிறார்.

இந்த இரும்பைத் தேடிச் செல்ல, ரோமானியர்கள் எகிப்து அல்லது இந்திய-மலாய் உலகைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த மாலுமிகளை நாடியிருக்கலாம் என்று Dr சோலேஹா வாதிடுகிறார்.

‘உலகைச் சுற்றி வந்த முதல் மனிதர் ஒரு மலாய்க்காரர்’ என்பதை வரலாற்றுப் செய்தித்தாள் பதிவுகள் கூறுவதையும் அவர் மேற்கொள் காட்டினார்.

இந்த விரிவான விளக்கம் மூலம் சமூக ஊடகங்களில் தமக்கு எதிராக பரவும் அவதூறுகள் முடிவுக்கு வரும் என்றும் Dr சோலோஹா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!