
வங்காளதேசம், டிசம்பர் 19 – 2024 ஆம் ஆண்டின் வங்காளதேசத்தின் ஜனநாயக போராட்டத்தின் முக்கிய இளைஞர் பிரிவு தலைவராக பதவி வகித்து வந்த Sharif Osman Hadi சிங்கப்பூர் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்ததைத் தொடர்ந்து, இன்று அதிகாலை வங்காளதேச தலைநகரில் கடும் வன்முறை ஏற்பட்டுள்ளது.
மரணச் செய்தியை கேள்வியுற்ற பின்னர் ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.உள்ளூர் செய்தி கட்டிடங்கள் உள்ளிட்ட பல இடங்களுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 12-ஆம் தேதி, Sharif உள்ளூர் மசூதியில் தொழுகையை முடித்து விட்டு வெளியே வந்தபோது முகமூடி அணிந்தவர்கள் அவரைத் துப்பாக்கியில் தாக்கினர். சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், நேற்று உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் 2026 ஆம் ஆண்டு தேசியத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்த நிலையில் இந்த அசம்பாவித சம்பவம் ஏற்பட்டு வங்காளதேசத்தை உலுக்கியுள்ளது.
வங்காளதேசத்தில் இடைக்கால பிரதமர், ஜனநாயக தலைவரின் இந்த மரணமானது ஈடு செய்ய முடியாத இழப்பு என்று குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் இந்த ஜனநாயகப் பயணம் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காவல் துறையினர் சந்தேகநபர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.



