
புத்ராஜெயா, மார்ச்-3 – தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சிலே, இன்னமும் ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளர்.
அதில் யாருக்கும் எந்த குழப்பமும் வேண்டாமென பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்திலிருந்து தினசரி நேரடி விளக்கமளிப்பு தொடங்கியிருப்பதை அடுத்து, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மூத்த பத்திரிகைச் செயலாளர் துங்கு நஷ்ருல் அபாய்டா அதனைத் தெளிவுப்படுத்தியுள்ளார்.
அந்த நேரலையை இன்று தொடங்கி துங்கு நஷ்ருல் தினமும் நடத்தி வருவார்.
இந்நிலையில், பிரதமர் அலுவலகத்தின் இந்த தினசரி நேரலை, அமைச்சர் ஃபாஹ்மி நடத்தி வரும் வாராந்திர செய்தியாளர் சந்திப்பைப் பாதிக்காது.
ஃபாஹ்மி நடத்தி வருவது, அரசாங்கக் கொள்கைகள் மற்றும் அமைச்சரவைக் கூட்டங்களுக்குப் பிந்தைய முடிவுகளை மக்களுக்கு அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பாகும்.
அதே சமயம், தான் நடத்துவது, பிரதமரின் அன்றாடப் பணிகள், முக்கிய முன்னேற்றங்கள் மற்றும் அமைச்சுகளுக்கான அவரின் உத்தரவுகள் குறித்த நேரலை என துங்கு நஷ்ருல் தெளிவுப்படுத்தினார்.
துங்கு நஷ்ருல் நடத்தும் விளக்கமளிப்பு, தினமும் காலை 11 மணிக்கும் பின்னர் மாலை 5 மணிக்கும் டத்தோ ஸ்ரீ அன்வார் மற்றும் பிரதமரின் அதிகாரப்பூர்வ facebook பக்கங்களில் இடம் பெறும்.