
சிரம்பான், நவம்பர்-7, நெகிரி செம்பிலான், சிரம்பான், லோபாக்கில் உள்ள தனியார் பள்ளியின் நான்காவது மாடியிலிருந்து விழுந்து 16 வயது மாணவர் உயிரிழந்தார்.
இன்று காலை 6 மணிக்கு அம்மாணவர் பள்ளிக்கு வந்த போது அத்துயரம் நிகழ்ந்தது.
உடனடியாக அம்புலன்ஸ் வண்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து பார்த்த போது, அம்மாணவர் ஏற்கனவே இறந்து விட்டது உறுதிச் செய்யப்பட்டது.
எனினும் அவர் எப்படி கீழே விழுந்தார் என்பது தெரியவில்லை.
பள்ளி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், அச்சம்பவம் தொடர்பான போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என கூறியது.