Latestஉலகம்

அதிகம் பழம் உண்டதால் ‘ஒகன்’ கரடிக்கு வயிற்று வலி; உலகம் முழுவதும் வைரலான துருக்கி கரடி

இஸ்தான்புல், செப்டம்பர் 8 – துருக்கியில் பழுப்பு நிறக் கரடி ஒன்று அதிகமாகப் பழம் உண்டதால் வயிற்று வலி ஏற்பட்டு தவித்த காணொளி உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது.

கோடிக்கணக்கான மக்களை சிரிக்க வைத்த 300 கிலோ எடையுடைய “ஒகன்” என்றழைக்கப்படும் அந்த ஆண் கரடிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் உடனே இஸ்தான்புல் பல்கலைக்கழக விலங்கு மருத்துவப் பீடத்திற்கு அக்கரடியை கொண்டு சென்றனர்.

ஒகன் தற்போது நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றும் அதன் உடலை குளிர்விக்க விரைவில் அதனைக் குளத்தில் விளையாட அனுமதிக்கவுள்ளனர் என்றும் இஸ்தான்புல் வனவிலங்கு மற்றும் இயற்கை வள துறையினர் அறிவித்தனர்.

தற்போது அதன் உணவுமுறை மிகக் கவனமாக கண்காணிக்கப்பட்டு வருதைத் தொடர்ந்து பருவத்திற்கேற்ற பழங்கள், காய்கறிகள், பொனிட்டோ மீன், மேலும் குளிர்காலத்தில் தேன் ஆகியவை அதற்குப் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் நகைச்சுவை அலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நெட்டிசன்களில் பலர், பல கிண்டலான கேலியான பதிவுகளைத் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

அதேசமயம், வனவிலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் உணவுமுறை கண்காணிப்பின் அவசியத்தையும் இச்சம்பவம் நினைவூட்டுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!