Latestமலேசியா

அனுமதி வழங்கப்படாத விளம்பர பலகைகளை கோலாலம்பூர் மாநகர் மன்றம் இடித்தது

கோலாலம்பூர், பிப் 27 – ஜாலான் சையத் புத்ராவில் உள்ள அங்கீகரிக்கப்படாத விளம்பரப் பலகைகளை இடிக்கும் நடவடிக்கையை கோலாலம்பூர் மாநகர் மன்றம் மேற்கொண்டது.

புகார்களைப் பெற்ற பின்னர் விளம்பர பலகை உரிமையாளருக்கு மூன்று அமலாக்க அறிவிப்புகளை வழங்கியதாகக் கோலாலம்பூர் மாநகர் மன்றம் தனது முகநூலில் பதிவேற்றம் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

DBKL அதன் Adu@KL இணயம் வாயிலாக அங்கீகரிக்கப்படாத மேம்பாடு தொடர்பாக 1982ஆம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 26(1)(b) மற்றும் பொது இடத்தில் தடைகள் ஏற்படுத்தியது தொடர்பாக சாலை , வடிகால் மற்றும் கட்டிடச் சட்டம் 1974 இன் பிரிவு 46(1)(a) ஆகியவற்றின் கீழ் விளம்பர பலகையின் உரிமையாளருக்கு நோட்டிஸ்கள் விநியோகிக்கப்பட்டன.

செயல்பாடுகளை நிறுத்தவும், இடித்து அகற்றவும், உபகரணங்களை அழிக்கவும் உரிமையாளருக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டன.

எனினும் ஒரு கட்டமைப்பை மட்டுமே உரிமையாளர் அகற்றியிருந்தார்.

இதன் விளைவாக இரண்டு அங்கீகரிக்கப்படாத விளம்பரப் பலகைகளை இடித்த பின்னர் அங்கிருந்து அனைத்து குப்பைகளையும் கோலாலம்பூர் மாநகர் மன்றம் அகற்றியது.

மேலும் சாலைகளை தொடர்ந்து கண்காணித்து, தேவைப்படும் இடங்களில் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!