
பந்திங், நவம்பர்-3,
1975-ஆம் ஆண்டு சிலாங்கூர் குவாலா லங்காட்டில் தொடங்கிய முதல் Lions Club – பந்திங் லயன்ஸ் கிளப்பாகும்.
அண்மையில் அது 50-ஆம் ஆண்டு பொன்விழாவை சிறப்பாகக் கொண்டாடியது.
விழா ஒருங்கிணைப்பாளரான Ln. Asotha Batunable, கடந்த 50 ஆண்டுகளாக சமூக சேவையில் தன்னலமின்றி செயல்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
லயன்ஸ் கிளப்பின் நோக்கமே கருணை, ஒற்றுமை மற்றும் சேவை உணர்வை மக்கள் மத்தியில் வளர்ப்பது தான் என அவர் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
இவ்விழாவில் முக்கிய அம்சமாக Ln. Kunasikaran Maruthamuthu, 2025–2026-ஆம் ஆண்டுக்கான தலைவராகவும், அவரோடு புதிய நிர்வாகக் குழுவும் மாவட்ட அதிகாரிகள் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
புதியத் தலைமையில் பந்திங் லயன்ஸ் கிளம் இன்னும் துடிப்போடு செயல்படுமென Kunasikaran தெரிவித்தார்.
எதிர்காலத்திலும், சமூகத்திற்காக அன்புடன் சேவை செய்வோம் என்ற உறுதியை ஏற்போம் என, பந்திங் லயன்ஸ் கிளப் ஆலோசகர் டத்தோ R.V. Vela கூறினார்.
“சேவை செய்யும் மனமுள்ள அனைவரும் ஒன்றிணைந்து, கருணையுடனும் வலிமையுடனும் ஒரு பிரகாசமான சமூகத்தை உருவாக்கலாம்” என்ற கருத்தை இந்த பொன்விழா பறைசாற்றியது.



